காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்: சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது. ஏசாயா 9:2

ஒளிக்கான உத்தரவாதம் தரப்பட்டுள்ளது

அறிவியல் கற்ற மாணாக்கர் அனைவருமே, மின் விளக்கைக் கண்டறிந்தவரின் பெயரை நிச்சயமாய் அறிந்துள்ளனர். மின் விளக்கு என்னவோ, மக்களை வியப்பில் ஆழ்த்தினாலும், அது வேலை நேரத்தை இரவிலும் நீட்டித்து, புது வடிவத்தில் அடிமைத்தனத்தை அரங்கேற்றியது எனலாம். ஒளியை உண்டாக்கிய கடவுள், தன்னை ஒளி என பிரகடப்படுத்திய மகனை, எங்கே, எப்போது, எப்படி அனுப்புவார் என்பதைத்தான் தீர்க்கதரிசிக்கு ஒளிர்வித்து, வெளிப்படுத்தி மகிழ்ந்தார்: “காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்: சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது.” (ஏசாயா 9:2) தீர்க்கதரிசனமும், இறை வார்த்தையே, எனில், எல்லாக் காலத்திலும் உண்மையானதே. இவ்வார்த்தைகளைக் கூர்ந்து நோக்கினால், உண்மை விளங்க வேண்டும்- காரிருள், மரண நிழல் சூழ்ந்துள்ள நாடு, சுடர் ஒளி என்பன ஒரு நாட்டை, மக்களை, பொழுதைக் குறிக்கின்றது. கடவுளை அறிய முடியாமல் இருப்பதை விட வேறென்ன, பெரிய இருள் இருக்க முடியும்?. அவர் மகன் தான் பேரொளி எனக் காண முடியாததை விட என்ன பார்வையின்மை இருக்க முடியும்? தங்கள் தேசத்தை ஒளியோடு அடையாளப்படுத்தி வாழ்ந்தாலும், கடவுளின் ஒளி, அவரது இரக்கத்தின் மிகுதியால் அவ்விடத்தில் திடீரெனத் தோன்றுவது நிச்சயமே. கடவுள் முன் நம்மைத் தாழ்த்துவோம், அவரே நம் அகங்கார இருளை அகற்றி, மெய்யான ஒளியைக் காணச் செய்வாராக.

 

அப்பா, சாவின் இருள் சூழ்ந்த நாட்டின் மக்கள் மேல் உம் ஒளியை உதிக்கக் செய்யப் போவதற்காக நன்றி. உம் ஆவியார் தாமே, ஒளியாம் உம் மகனை, நாங்கள் மீண்டும் காணவும், ஆராதிக்கவும் உதவி செய்வாராக, வல்லமை மிகு இயேசுவின் நாமத்தில் செபிக்கிறோம், ஆமென்.