தேவை அறுவடையின் கரங்கள்
நிறுவனங்கள் தங்களின் தேவையின் அடிப்படையில் வேலைக்கு ஆட்கள் தேவையென, வெவ்வேறு காலங்களில் வித்தியாசமான பணிக்கு வேறு வேறான விளம்பரங்களை வெளியிடுவர். விவசாய நிறுவனத்தில் காலத்தின் தேவையைப் பொறுத்து பயிர் சார்ந்த பணிகள் விளம்பரம் செய்யப்படுகின்றன- விதைகள் சேகரிப்பு, நிலம் சமன் செய்தல், பயிர் நடல் , தண்ணீர் பாய்ச்சுதல், ஊட்ட மருந்து, மேலும் பாதுகாப்பு பூச்சிக்கொல்லிகள் தெளிப்பு, மற்றும் அறுவடை என்பன. இங்கே, இயேசு அறுவடையின் காலத்தை நாம் நெருங்கியிருப்பதால், அறுவடைப் பணியாளர்களை வேண்டி மன்றாட அழைக்கிறார்: “அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, 'அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள் ' என்றார்.” (மத்தேயு 9:37-38) நாம் கடந்து செல்லும் தற்போதைய காலத்தை உணராது, அவரது அரசின் இப்போதைய தேவையை அறியவில்லையென்றால், இறை பணியாளர் என்று தன்னை எண்ணுபவர் கூட, வேறு பணியில் தன்னை தயாரித்துத் தீவிரப்படுத்திக்கொண்டும் இருக்கலாம். எனவே தான், அறுவடையின் காலத்தை நாம் கடக்க உள்ளோம் என கவனமாய் எச்சரிக்கப்படுகிறோம். நம் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளால் ஏமாற்றமடையாமல், கவனம் சிதறாமல், நம் காலத்தையும், ஆற்றலையும் இறை அரசின் இப்போதைய தேவையாம் அறுவடைக்கு ஒப்படைப்போமாக.
அப்பா, அறுவடைப் பணியில் சேர எங்களுக்கு அழைப்பு விடுவதற்கு நன்றி. உம் ஆவியார் தாமே எங்கள் கரங்களை அறுவடைக்கென்று வலுப்படுத்தி, விசுவாசத்துடனே முழந்தாளிட்டு, எங்கள் மனங்களும் அதற்கென்றே பக்குவப்பட செபிக்க உதவுவாராக. இயேசுவின் வல்லமை நிறை நாமத்தில் செபிக்கிறோம், ஆமென்.