சிறப்பு ஆயுதமேந்திய துருப்பு
ராணுவத்தில் மிகத் தேர்ந்த பயிற்சி பெற்ற, சிறப்புப் பிரிவும் உண்டு, அவை படை முன்சென்று தாக்க ஏதுவாகத் தடைகளை அகற்றி வழி ஏற்பாடு செய்து, முக்கிய பாதுகாப்பையும் வழங்கும். எந்த ஒரு யுத்தத்திலும் இவர்களின் பங்கும், உடனிருப்பும் மிகப் பெரிய இடம் வகிக்கும். அவ்வாறே, கடவுள், தாம் தேர்ந்து கொண்டவரின், சார்பில் செயல் பட நியமித்துள்ள சிறப்பு ஆயுதமேந்திய தூதர்களாம் துருப்பின் எண்ணிக்கையோ கணக்கில் அடங்காதது. மனித வீரர்களின் துணையுடன் படை நடத்தி, வெற்றி கண்ட தாவீதுக்குக் கிடைத்த இன்னுமோர், சிறப்புப் படையின் ஏற்பாடு, கடவுளின் தூதர்களின் சைனியமாம்: “தேவன் அவரது தூதர்களை உனக்காகக் கட்டளையிடுவார். நீ போகுமிடங்களிலெல்லாம் அவர்கள் உன்னைப் பாதுகாப்பார்கள்.” (சங்கீதம் 91:11) ஒரே ஒரு தூதன் சென்று, தன் மக்களை வாட்டி, வதைத்த எகிப்தியரின் தலையீச்சன்களை தேசம் முழுவதும் சென்று ஒரே இரவில் கொன்றழித்துப் பழி தீர்த்தது. 185000 எண்ணிக்கையிலிருந்த அசீரியரின் போர் வீரர்களையும், அது போன்றே இன்னுமொரு தூதன் தனியே நின்று, பொழுது விடியுமுன்னே தாக்கி அழித்தான். சொல்லி விவரிக்க இயலாத இந்த, கடவுளின் சேனை, தான் தேர்ந்து கொண்டவரின் சார்பில் செயல் பட, எப்போதும் தயார் நிலையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதைவிட மேலான, சிறப்புப் பாதுகாப்பை நம் கடவுள் ஏற்பாடு செய்து உத்தரவிட்டிருப்பதால், நாம் எங்கு சென்றாலும் அவர் அன்பின் பாதுகாப்பில் இருப்போம் என்பதில் அகம் மகிழ்வோம். அவர் நம்மைக் காப்பதில் அலாதி இன்பம் கொள்கிறார்.
அப்பா, ஆவிக்குரிய சேனையாம் உம் தூதர்களை, எம் சார்பில் நியமித்து, உத்தரவிட்டுக் காத்துக்கொண்டே இருப்பதற்கு நன்றி. உம் ஆவியார் தாமே, இந்த ஏற்பாட்டை எண்ணி அகம் மகிழ்ந்து, விசுவாசத்துடனும், துணிவுடனும், நன்றியோடும் எங்களுக்குத் தரப்பட்டுள்ள இலக்குகளைத் தவறாமல் அடையத் துணை புரிவாராக. இயேசுவின் வல்லமை மிகு நாமத்தில் செபிக்கிறோம், ஆமென்.