வாருங்கள் அவரை ஆராதிப்போம்
சில நேரங்களில் இப்படியும் நடக்கும், போக வேண்டிய இடம் தெரியும், பயண ஏற்பாடும் செய்தாயிற்று, எனினும் நண்பர்களிடமும் விடை கூறியும், என்னவோ நிகழ்ந்து, விமானத்தைத் தவற விட்டனர். யூதர்களும், ஆயிரம் ஆண்டளவாய், மீட்பருக்காகக் காத்திருந்தும், அவர் இந்த பூமிக்கு வந்த போது, முதலில் அவரைச் சந்திக்கத் தவறினர். ஆனால், அந்த மூன்று ஞானிகளோ, வினோதமான விண்மீன் ஒன்று, வானில் தோன்றியதைக் கண்டு, வியந்து, அதைக் குறித்துக், கற்றறிந்த கணமே, அரசர்க்கெல்லாம் அரசர் பிறந்துள்ளார், என்ற ஆச்சரியமான செய்தியை உணர்ந்ததும், சற்றும் தாமதிக்க்கதே, தகுதியான பரிசுப் பொருட்களுடன், விண்மீன் வழிகாட்ட, வாருங்கள் அவரை ஆராதிப்போம் என்ற முழக்கத்துடன் நண்பர்களை மீட்பரை ஆராதிக்கச் சென்றனர்: அவர்கள் மக்களைப் பார்த்து, “புதிதாகப் பிறந்த யூதர்களின் அரசரான குழந்தை எங்கே? அவர் பிறந்துள்ளதை அறிவிக்கும் நட்சத்திரத்தைக் கண்டோம். கிழக்கு திசையில் அந்நட்சத்திரம் மேலெழுவதைக் கண்டோம். நாங்கள் அவரை வணங்க வந்துள்ளோம்” என்று சொன்னார்கள். (மத்தேயு 2:2) ஆனால், எதிர் பார்த்துக் காலங்காலமாய்க் காத்திருந்த யூதர்களோ, அவர் எங்கே பிறப்பார், யாருடைய கோத்திரத்தாயிருப்பார் என எல்லாம் மனப்பாடமாய், அறிந்திருந்தும், அவர் வந்த வேளையில், அவரைக் காணத் தவறினர்: ஏரோது மன்னன் யூதர்களின் இப்புதிய அரசரைப்பற்றிக் கேள்வியுற்றான். அதைக் கேட்டு ஏரோது மன்னனும் எருசலேம் மக்கள் அனைவரும் கலக்கம் அடைந்தனர். ஏரோது தலைமை ஆசாரியர் மற்றும் வேதபாரகரின் கூட்டத்தைக் கூட்டினான். கிறிஸ்து எங்கே பிறந்திருப்பார் என அவர்களைக் கேட்டான். அதற்கு அவர்கள், “யூதேயாவிலுள்ள பெத்லகேமில் பிறப்பார். ஏனெனில், “‘யூதேயாவிலுள்ள பெத்லகேமே, உனக்கு யூதேயாவின் ஆட்சியாளர்களுக்கிடையில் முக்கியத்துவம் உண்டு. ஆம், உன்னிலிருந்து ஒரு பிரபு தோன்றுவார். அவர் இஸ்ரவேல் என்னும் என் மக்களை வழி நடத்துவார்’ என்று தீர்க்கதரிசி வேத வாக்கியங்களில் எழுதியுள்ளார்” என்று கூறினார்கள். (மத்தேயு 2:3-6) ஞானிகளின், இந்த நல்ல முன்மாதிரியை, நாமும் பின்பற்றி, விரைந்து, தகுதியான நன்றி, துதி, ஆராதனை என்ற எளிய பரிசுப் பொருட்களுடனே, இன்னும் நம்மை ஆச்சர்யத்திலாழ்த்தும் மீட்பரை, வாருங்கள் அவரை ஆராதிப்போம் என்ற பாடலுடனே, வணங்க விரைந்து செல்வோமாக.
அப்பா, தகுதியற்ற பாவிகளான, எங்களையும், உயிர் மூச்சுள்ள எல்லோரும் ஆராதிக்க வேண்டிய, உம் மகனை ஆராதிக்கத் தூண்டி, அனுமதிப்பதற்காக, நன்றி. உம் ஆவியார் தாமே, மீட்பரை எதிர்கொள்ள, எங்களை, எப்போதும் தூண்டி, தாள் பணிந்து, துதியுடனே, ஆராதிக்கத் துணை செய்வாராக, இயேசுவின் மிகத் தகுதி நிறை நாமத்தில் செபிக்கிறோம், ஆமென்.