எல்லா கண்களும் காணும்
மனித கண்கள் எல்லாமே, செய்தி, விவாதம், படங்கள் என காட்சி ஊடகத்தைச் சுற்றி, அடிமைகளாக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்கள் எல்லாமே, விரைவில் காணப்போகும் விரைவுத் தகவல் என்னவென்றால், வான தூதர்கள் தந்த அதே செய்தி தான்: “கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தைப் பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்களல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார் என்றனர்.” (அப்போஸ்தலர் 1:11) வானத்தைப் பார்த்துக் கொண்டே நிற்க வேண்டாம், என கலிலேயரைச் சொன்ன தூதர்கள் தாம், அனைவரும் ஒருநாள், தவறாமல் வானத்தைப் பார்க்க வேண்டும் என்றும், பார்ப்பார்கள் என்றும் உறுதியாய்ச் சொன்னார்கள். நாம் விசுவாசிக்கும் நம் கடவுளின் மகனின், இரண்டாம் வருகைக்காக, எப்போதும் ஆயத்தமாய் இருப்போம். அவர் வந்து கடவுளின் ஆட்சியை நிறுவி, எல்லாரையும், தீர்ப்பளித்து, ஆளுகைக்குட்படுத்தி, என்றுமே நிலையான தந்தை, மகன், பரிசுத்த ஆவியாரின் ஆட்சியில் நம்மையும், மனமிரங்கி சேர்த்துக்கொள்வாராக.
அப்பா, உம் மகனின் இரண்டாம் வருகையின் நிச்சயத்துக்காக நன்றி. உம் பரிசுத்த ஆவியார் தாமே, உலகின் அனைத்து மனிதரோடும், உம் மகன் மீண்டும் இறங்கி வருவதைக் காணவும், அவரது வருகையில் எங்கள் மீது மனமிரங்கி, எங்களையும், ஏற்றுக்கொள்ளச் செய்வாராக, இயேசுவின் வல்லமை நிறை நாமத்தில் செபிக்கிறோம், ஆமென்.