அவர் தாவீதின் திறவுகோலை உடையவராக இருக்கின்றார். அவர் ஒரு கதவைத் திறந்தால், அதை யாராலும் மூட முடியாது. மேலும் அவர் கதவை மூடினால் யாராலும் அதைத் திறக்க முடியாது.

மிகவும் முழுமையான அதிகாரம்

தலைமை நிர்வாக அதிகாரியாகச் செயல்படுபவர், பெரிய சம்பளத்தைப் பெறுகிறார், ஏனென்றால், அவர் ஊதியம் போன்றே பொறுப்பும் சற்று கடினமானதும், உயர்வானதுமே. என்றாலும், அவரும் காண முடியாத இன்னொருவரின், பெரிய அதிகாரத்துக் கட்டுப்பட்டவர், என்பதை அறிந்தே செயல் படுபவர். நாம் ஆராதித்து, வழிபடுகின்ற கடவுளின் அதிகாரமோ, எல்லையற்றது, மற்றும் விவரிக்க இயலாதது: “பிலதெல்பியா சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது: “உண்மையுள்ளவரும் பரிசுத்தமுள்ளவரும் இவைகளை உனக்குக் கூறுகிறார். அவர் தாவீதின் திறவுகோலை உடையவராக இருக்கின்றார். அவர் ஒரு கதவைத் திறந்தால், அதை யாராலும் மூட முடியாது. மேலும் அவர் கதவை மூடினால் யாராலும் அதைத் திறக்க முடியாது. (வெளி 3:7) இறுதிக் காலத்துக்கென்று அவரே தேர்ந்தெடுத்து உண்டாக்கிய ஊழியன், அவரது பேரிரக்கத்தைப் பெற்றிருப்பதால், அவனுக்குக் கொடுக்கப்பட்ட கடமையை, கட்டளையாய் உணர்ந்து நிச்சயமாய் நிறைவேற்றி முடிப்பான்: இப்போதும் சிறுவனே, நீ உன்னதமான தேவனின் ஒரு தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுவாய். கர்த்தருக்கு முன்பாக முன்னோடியாக நீ நடப்பாய். கர்த்தரின் வருகைக்காக மக்களைத் தயார் செய்வாய். அவரது மக்கள் இரட்சிக்கப்படுவர் என்பதை அவர்களுக்கு உணர்த்துவாய். அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவர்கள் இரட்சிக்கப்படுவர். நம் தேவனின் அன்பான இரக்கத்தால் பரலோகத்திலிருந்து புதுநாள் ஒன்று நம்மீது பிரகாசிக்கும். (லூக்கா 1:76-78) இன்றும் எவராலும் அறிய முடியாத, உணரக் கூடாத, கடவுளின் விவரிக்கவே இயலாத இரக்கத்தையும் குறித்தே, அறிவித்துக் கொண்டே இருக்க வேண்டும், ஏனென்றால், கடவுளின் இரக்கம், அவர் உருவாக்கிய பூமி மேலும், மாந்தர் மேலும் அளவு கடந்ததாய், உள்ளது. மாந்தருக்குத் தந்த அதிகாரத்தை அவர்கள் இழந்திருந்தாலும், தன் மகனை அனுப்பி அதிகாரத்தை மறுபடியும் மீட்டு, ஆள வேண்டிய மாந்தர்க்கே தந்து மகிழ்கிறார். எல்லோரும் அவர் வருகையை நேசிப்போம்.

 

அப்பா, மிகவும் முழுமையான அதிகாரம் கொண்டவராக நீர் ஒருவர் மட்டுமே இருப்பதற்கு நன்றி, உமது ஆவியார் தாமே, வருகையின் காலத்தின் செய்தியைக் கனிவோடும், தாழ்ச்சியோடும் கற்பிக்கக் கற்பித்து உதவுவாராக. இயேசுவின் அதிகாரம் நிறைந்த நாமத்தில் செபிக்கிறோம், ஆமென்.