பிறகு நான் என் கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டேன். கர்த்தர், “நான் யாரை அனுப்புவேன்? நமக்காக யார் போவார்?” என்று சொன்னார். எனவே நான், “நான் இருக்கிறேன், என்னை அனுப

எச்சரிக்கை என் இறைவாக்கினன்

வாசிக்கத் தெரியாதவர்கள் கூட, பாதிக்கக் கூடாதென்பதற்காக படம் வரைந்து, அதன் அருகே நெருங்கக் கூடாதென, சக்தி அதிகமான, பொருட்களும், ஆட்களுமே, நமக்கு உதவுவதற்கென்றே, நம் அருகே வைக்கப்பட்டுள்ளனர். சில மனிதர்கள், இந்த வகையைச் சேர்ந்தவர்கள், தீர்க்கதரிசி, இவர்களில் ஒருவன், அவனோ அழைக்கப்பட்டவன், அனுப்பப்பட்டவன், நியமிக்கப்பட்டவன், ஒரு குறித்த இடத்தில், குறித்த காலத்தில், ஒரு குறித்த பணிக்காக, கடவுள் மேல் கொண்ட பேராவலால், மக்களை மீட்க விரும்பும், தேவனின் வேட்கையை, சொல்லி புரியவைக்க, வைக்கப்பட்டுள்ளனர், ஏசாயா தீர்க்கதரிசி போல்:  பிறகு நான் என் கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டேன். கர்த்தர், “நான் யாரை அனுப்புவேன்? நமக்காக யார் போவார்?” என்று சொன்னார்.

எனவே நான், “நான் இருக்கிறேன், என்னை அனுப்பும்” என்றேன்.

9 பிறகு கர்த்தர் சொன்னார்: “போ, இதனை ஜனங்களிடம் சொல்: ‘கவனமாகக் கேளுங்கள்! ஆனால் புரிந்துகொள்ளாமல் இருங்கள்! கவனமாகப் பாருங்கள். ஆனால் அறிந்துகொள்ளாமல் இருங்கள்!’ 10 ஜனங்களைக் குழப்பமடைய செய். ஜனங்கள் தாங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் புரிந்துகொள்ளாதபடிக்குச் செய். நீ அவ்வாறு செய்யாவிட்டால், ஜனங்கள் தங்கள் காதால் கேட்பவற்றையும் புரிந்துகொள்வார்கள். அவர்கள் மனதில் உண்மையை உணர்ந்து கொள்வார்கள். இவற்றை அவர்கள் செய்தால், பிறகு அந்த ஜனங்கள் என்னிடம் திரும்பி வந்து குணமாவார்கள்” என்றார்.

11 பிறகு நான், “ஆண்டவரே, நான் எவ்வளவு காலம் இதனைச் செய்ய வேண்டும்?” எனக் கேட்டேன்.

அதற்கு கர்த்தர், “நகரங்கள் அழிந்துபோகும்வரை இதனைச் செய். ஜனங்கள் போகும்வரை செய். வீடுகளில் எவரும் வாழாத நிலைவரும்வரை செய். பூமி அழிந்து காலியாகும்வரை செய்”, என்றார்.

12 கர்த்தர் அந்த ஜனங்களை வெகு தூரத்திற்குப்போகச்செய்வார். நாட்டில் காலியான இடங்கள் அதிகமாக இருக்கும். 13 ஆனால் பத்தில் ஒரு பாகமான ஜனங்கள் மட்டும் இந்நாட்டில் வாழ அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் அழிக்கப்படமாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் கர்த்தரிடம் திரும்பி வருவார்கள். இவர்கள் கர்வாலிமரம் போன்றவர்கள். இது வெட்டுண்டு போனபிறகு அடிமரம் மட்டும் நிற்கும் இந்த அடிமரம் (மீதியான ஜனங்கள்) மகா விசேஷித்த ஒரு வித்தாக இருக்கும். (ஏசாயா 6:8-13) 

நாம் கடவுளைத் துதிப்போம், தீர்க்கதரிசிகளைத் தேர்ந்தெடுத்ததற்காக, நமக்கு உதவவே அனுப்பியிருப்பதற்காக, என்றாலும் அவனின் அழைப்பும், அபிஷேகமும், வார்த்தையும், கடவுளிடமிருந்தே வருவதால், பெரும்பாலும் புரிந்து கொள்ளவும், விளங்கவும் கடினமாகவே இருக்கும். நம்மை அரவணைக்க விரைந்துவரும், அவர் மகனால் நிறைவேறிற்று, என்று, சிலுவையில், உச்சரித்த இயேசுவின், மீட்பின் வார்த்தையைத் தலைவணங்கி ஏற்றுக் கொள்வோமாக.

 

அப்பா, தீர்க்கதரிசியின் அழைப்புக்காக நன்றி. உம் ஆவியார் தாமே, தீர்க்கதரிசியும், தீர்க்கத்தரிசனத்தையும், அடையாளங்கண்டு, செய்தியை உணர என்றும் உதவுவாராக, இயேசுவின் வல்லமை நிறை நாமத்தில் செபிக்கிறோம், ஆமென்.