நாகூம் 1:2 "கர்த்தர் ஒரு எரிச்சலுள்ள தேவன், கர்த்தர் குற்றமுடையவர்களைத் தண்டிக்கிறார்...."

நம் தேர்வுகள் தீர்மானிக்கும்

கர்த்தர் நினிவே மேல் கோபமாயிருக்கிறார்

கர்த்தர் ஒரு எரிச்சலுள்ள தேவன், கர்த்தர் குற்றமுடையவர்களைத் தண்டிக்கிறார்.

    கர்த்தர் குற்றம் செய்தவர்களைத் தண்டிக்கிறவரும்,

    மிகவும் கோபமானவருமாயிருக்கிறார்!

கர்த்தர் தனது பகைவர்களைத் தண்டிக்கிறார்.

    அவர் தனது பகைவர்கள் மீது கோபத்தை வைத்திருக்கிறார்.

கர்த்தர் பொறுமையானவர்.

    ஆனால் அவர் வல்லமையுடையவராகவும் இருக்கிறார்.

கர்த்தர் குற்றம் செய்கிறவர்களைத் தண்டிப்பார்.

    அவர் அவர்களை விடுதலை பெற விடமாட்டார்.

கர்த்தர் தீயவர்களைத் தண்டிக்க வந்துக்கொண்டிருக்கிறார்.

    அவர் தமது ஆற்றலைக் காட்டுவதற்காகப் புயலையும் சுழற்காற்றையும் பயன்படுத்துவார்.

ஒரு மனிதன் தரையின் மேலும் புழுதியின் மேலும் நடக்கிறான்.

    ஆனால் கர்த்தரோ மேகங்களின்மேல் நடக்கிறார்.

கர்த்தர் கடலிடம் அதட்டி பேசுவார் அது வறண்டுப்போகும்.

    அவர் அனைத்து ஆறுகளையும் வற்றச்செய்வார்.

வளமான நிலமுடைய பாசானும் கர்மேலும் வறண்டுப்போகும்.

    லீபனோனின் மலர்கள் வாடிப்போகும்.

கர்த்தர் வருவார்,

    குன்றுகள் அச்சத்தால் நடுங்கும்,

    மலைகள் உருகிப்போகும்.

கர்த்தர் வருவார், பூமி அச்சத்தால் நடுங்கும்.

    உலகமும் அதிலுள்ள ஒவ்வொருவரும் அச்சத்தால் நடுங்குவார்கள்.

கர்த்தருடைய பெருங்கோபத்திற்கு எதிராக எவரும் நிற்கமுடியாது.

    எவராலும் அவரது பயங்கரக் கோபத்தைத் தாங்க முடியாது.

அவரது கோபம் நெருப்பைப்போன்று எரியும்.

    அவர் வரும்போது கல்மலைகள் பேர்க்கப்படும்.

கர்த்தர் நல்லவர்.

    அவர் இக்கட்டான காலங்களில் நாம் செல்லக்கூடிய பாதுகாப்பான இடம்.

    அவர் தன்னை நம்புகிறவரைக் கவனிக்கிறார்.

ஆனால் அவர் அவரது எதிரிகளை முழுவதுமாக அழிப்பார்.

    அவர் ஒரு வெள்ளத்தைப்போன்று அவர்களை அழிப்பார்.

    அவர் தமது எதிரிகளை இருளுக்குள் துரத்துவார். நாகூம் 1:2-8

 

 

 

 

உபாகமம் 30:15-20 

15 “இன்று நான் வாழ்வையும், மரணத்தையும், நன்மையையும், தீமையையும் உனக்கு முன்பாகத்தெரிந்துகொள்ளும்படியாகக் கொடுக்கிறேன். 16 உனது தேவனாகிய கர்த்தரை நேசிக்கும்படி இன்று நான் உனக்குக்கட்டளையிடுகிறேன். அவரைப் பின்பற்றும்படியும் அவரது சட்டங்களுக்கும், விதிகளுக்கும், கட்டளைகளுக்கும்கீழ்ப்படியுமாறு நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். பிறகு நீ வாழ்வாய், உனது ஜனம் பெரிதாக வளரும். உனக்குச்சொந்தமாக்கிக்கொள்ள நீ நுழைகின்ற இந்த நாட்டில் உன்னை, உனது தேவனாகிய கர்த்தர் ஆசீர்வதிப்பார். 17 ஆனால்கர்த்தரிடமிருந்து விலகி நீ அவருக்குச் செவிசாய்க்க மறுத்து நீ அவரை தொழுதுகொள்வதிலிருந்து விலகி பிற பொய்த்தெய்வங்களுக்கு சேவை செய்தால். 18 நீ அழிக்கப்படுவாய். நான் உன்னை எச்சரிக்கிறேன். நீ கர்த்தரிடமிருந்துவிலகினால், உனக்குச் சொந்தமாக்கிக்கொள்ள நீ நுழைந்து கொண்டிருக்கிற யோர்தானைக் கடந்து போகிற நாட்டில்நீண்டகாலம் வாழமாட்டாய்.

19 “இன்று நான் உனக்கு முன்பாக இரண்டு வழிகளை வைத்தேன். உனது தேர்வுக்கு பரலோகத்தையும் பூமியையும்சாட்சியாக வைத்தேன். நீ வாழ்வு அல்லது மரணத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். நீ வாழ்வைத் தெரிந்தெடுத்தால்அது ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும். நீ மரணத்தைத் தெரிந்தெடுத்தால் அது உனக்கு சாபத்தைக் கொண்டுவரும். எனவே வாழ்வைத் தேர்ந்தெடு. பிறகு நீயும் உனது பிள்ளைகளும் வாழலாம். 20 நீ உனது தேவனாகிய கர்த்தரை நேசித்துஅவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். அவரைவிட்டு விலகக்கூடாது. ஏனென்றால், கர்த்தரே உனது வாழ்வு. உனது முற்பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு ஆகியோருக்கு கர்த்தர் வாக்களித்த நாட்டில் நீண்ட காலம்வாழும்படி அவர் உன்னை ஆசீர்வதிப்பார்.”

 

 

மத்தேயு 6:33 

33 தேவனின் இராஜ்யத்தையும் நீங்கள் செய்ய வேண்டுமென தேவன் விரும்பும் நற்செயல்களைச் செய்தலையுமேநீங்கள் நாடவேண்டும். அப்போது தேவன் உங்களது மற்றத் தேவைகளையும் நிறைவேற்றுவார்.